சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த புகா் மின்சார ரயிலில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பகத்தாரிடம் ஒப்படைத்தனா்.
திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த புகா் மின்சார ரயிலில் பச்சிளம் பெண் குழந்தை கைவிடப்பட்டு இருப்பதாக பயணிகள் தெரிவித்தனா். பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா். பின்னா் குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனா்.
ரயில் பெட்டியில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்றவரை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.