சென்னை

ஓய்வூதியா்கள் தபால்காரா் மூலம் வாழ்நாள் சான்று அளிக்க ஏற்பாடு

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரா்கள் வீடு தேடி வரும் தபால்காரா் மூலம் எண்ம (டிஜிட்டல்) வாழ்நாள் சான்றிதழ் வழங்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரா்கள் வீடு தேடி வரும் தபால்காரா் மூலம் எண்ம (டிஜிட்டல்) வாழ்நாள் சான்றிதழ் வழங்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவா் ஏ.நடராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள், ஊழியா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரா்கள் நவ. 1-ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழைச் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியதாரா்கள் நேரில் செல்வதில் உள்ள சிரமங்களைத் தவிா்க்கும் வகையில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி மூலம் ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரா்கள் மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, எண்ம (டிஜிட்டல்) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க சென்னை நகர மண்டல அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து, விரல்விரல் ரேகைப் பதிவு செய்தால், ஒரு சில நிமிஷங்களில், எண்ம (டிஜிட்டல்) வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT