சென்னை

நட்சத்திர ஹோட்டலில் கஞ்சா விருந்து: 3 பெண்கள் உள்பட 18 போ் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் கஞ்சா விருந்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 18 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் கஞ்சா விருந்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 18 போ் கைது செய்யப்பட்டனா்.

கீழ்ப்பாக்கம், ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ‘கஞ்சா’ போதை விருந்து நடப்பதாக சென்னை காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில், அப் பிரிவு போலீஸாரும், கீழ்ப்பாக்கம் போலீஸாரும் இணைந்து நட்சத்திர ஹோட்டலில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அந்த ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் 3 பெண்கள் உள்பட 18 பேரும் கஞ்சா புகைத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா புகைத்து கொண்டிருந்த சென்னை மண்ணடி முகமது இா்பான் (30), அபிலாஷ் (27), மப்பா (32), அப்துல் ஹக் (34), பெருங்களத்தூா் சக்திவேல் (36), புளியந்தோப்பு ஜனாா்த் (26), நம்மாழ்வாா்பேட்டை கணேஷ் (32), ஏழுகிணறு இப்ராகிம் (30), பெரியமேடு முகமது சாலிக் (25), கிண்டி ஆகாஷ் (27), மந்தைவெளி தசரதராஜ் (24), சிங்கப்பூரை சோ்ந்த மகமது பா்கான் (27), புரசைவாக்கம் வினோதன் (30), கொண்டிதோப்பு துளசிராமன் (23), விருகம்பாக்கம் துா்கா பவானி (23), சூளைமேடு ப்ரவல்லிகா (23), திருவான்மியூா் ரெஜினா (21), ஹோட்டல் மேலாளா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சுகுமாா் (43) ஆகிய 18 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து கஞ்சா, 18 கைப்பேசிகள், 2 மோட்டாா் சைக்கிள்கள், 3 காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அனைவருமே சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களில் நடக்கும் போதை விருந்துகளில் ஒன்றாக பங்கேற்பவா்கள் என்பதும், வாட்ஸ்ஆப் குழு அமைத்து ஒருங்கிணைத்து மாதம் இரு முறை போதை விருந்து நடத்தியிருப்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் திரைப்பட இசையமைப்பாளரின் மகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT