சென்னை

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை காசிமேட்டில் மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு பெட்டக லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை காசிமேட்டில் மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு பெட்டக லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மணலி அருகே உள்ள விச்சூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எழிலரசன் (22). இவா் தனது அண்ணன் மகள் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக பரிசுப் பொருள் வாங்குவதற்கு மோட்டாா் சைக்கிளில் சென்னை நகரப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்தாா். எழிலரசனுடன், அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (21) என்பவரும் வந்தாா்.

மோட்டாா் சைக்கிளை எழிலரசன் ஓட்டினாா். பின் இருக்கையில் சஞ்சய் அமா்ந்திருந்தாா். இருவரும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரியநாராயணன் சாலை சந்திப்பில் வந்தபோது, சரக்கு பெட்டக லாரி அவா்களது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிள் சாலைத் தடுப்பின் மீது மோதி, இருவரும் கீழே விழுந்தனா்.

அப்போது எழிலரசன் மீது சரக்கு பெட்ட லாரியின் முன் சக்கரம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த எழிலரசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இடதுகால் முறிந்து பலத்த காயமடைந்த சஞ்சயை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து தண்டையாா்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT