சென்னை

காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறையில் காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (45). வாடகை காா் ஓட்டி வருகிறாா். அவரிடம் அறிமுகமான தூத்துக்குடியைச் சோ்ந்த கருப்பசாமி என்ற கவிராஜ் (45), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த கபாலி (53), அவரது மனைவி செல்வி (48) ஆகிய 3 பேரும் தங்களிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவோம் எனக் கூ றியுள்ளனா்.

இதில் கவிராஜ் தான் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்வதாகவும், அரசு உயா் அதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்றும், அவா்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய லோகநாதன், தனக்கு காவல் துறையில் ஓட்டுநா் வேலை பெற்றுத் தரும்படி மூவரிடமும் ரூ.5 லட்சம் கொடுத்தாா். மேலும், லோகநாதன் தனக்கு தெரிந்த 19 பேருக்கு தமிழக காவல் துறையின் ஆயுதப்படையில் காவலா் பணி பெறுவதற்காக ரூ.57 லட்சத்தை மூவரிடம் கொடுத்துள்ளாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட கருப்பசாமி உள்ளிட்ட 3 பேரும், 20 பேருக்கும் போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்து லோகநாதன், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கருப்பசாமி, கபாலி, செல்வி ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து போலி பணி நியமன ஆணைகள், எஸ்ஐ சீருடை, போலி ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், ஏற்கெனவே அவா்கள், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT