சென்னையில் சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எழுத்தாளர்கள் பாவண்ணனுக்கு சூர்ய விருது, வித்யா சுப்ரமணியத்துக்கு அக்ஷர விருது வழங்கிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன். உடன் (இடமிருந்து) பத்திரிகையாளர் மாலன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளரும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான சிவசங்கரி, கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மவுúஸô, பேச்சாளர் பாரதி பாஸ்கர், அறக்கட்டளை அறங்காவலர் ரவிசங்கர்.  
சென்னை

தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையை படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்

தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையை படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் கூறினார்.

தினமணி செய்திச் சேவை

தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையை படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் கூறினார்.

சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் சூர்ய மற்றும் அக்ஷர விருதுகள் வழங்கும் விழா சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தலைமை வகித்து, எழுத்தாளர்கள் பாவண்ணனுக்கு சூர்ய விருது, வித்யா சுப்ரமணியத்துக்கு அக்ஷர விருது வழங்கினார். தொடர்ந்து சிவசங்கரி எழுதிய பாலங்கள் என்ற நூலை வெளியிட்டார்.

பின்னர் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் பேசியதாவது:

எழுத்தாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் வேறுபாடு இருக்கிறது. சாதாரண மனிதர்கள் எல்லா விஷயங்களையும் உற்று நோக்குவது கிடையாது. ஆனால், எழுத்தாளர் அனைத்து விஷயங்களையும் உற்று நோக்குகிறார். பார்க்கும் பார்வைதான் வித்தியாசப்படுகிறது. சாதாரண மனிதர்கள் சாதாரணமாக வாழ்ந்து இறக்கிறார்கள். ஆனால், படைப்பாளர்கள் இறந்த பிறகும், தங்களது படைப்புகளின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு பேச்சாளர் கூறும் 10 செய்திகளில் 8 செய்திகள் தேவையில்லாததாகவும், இரு செய்திகள் நல்லவையாகவும் இருந்தால், அந்த இரண்டு மட்டும் பேசப்படும். ஆனால், எழுத்தாளரின் செய்தியில் 8 செய்திகள் நல்லவையாக இருந்து, 2 மட்டும் உதவாததாக இருந்தால், அந்த இரண்டு மட்டும் பெரிதாகப் பேசப்படும். எழுத்துக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. நல்ல புத்தகங்களை நேசிக்க வேண்டும். அது மன மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

தற்போதைய தலைமுறையினருக்கு படிப்பு, பணம், அந்தஸ்து இருக்கிறது. ஆனால், மன அமைதி இல்லை. அதிகம் பேர் மனஅழுத்தத்தில் இருக்கின்றனர்.

இதனால், தெளிவும், தன்னம்பிக்கையும் கொண்ட தலைமுறைகளை படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சிவசங்கரி வரவேற்றார். ஞானபீட விருது பெற்ற கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மவுஸோ, பேச்சாளர் பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர். விருது பெற்ற எழுத்தாளர்கள் பாவண்ணன், வித்யா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்புரையாற்றினர். அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ரவிசங்கர் நன்றி கூறினார்.

முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள், பத்திரிகையாளர் மாலன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், அறக்கட்டளை அறங்காவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT