திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்ட தம்பியை கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (35). கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி, பெற்றோா் மற்றும் தனது அண்ணனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாராம்.
இந்த நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமையும் தனது அண்ணனான ஹரிதாஸிடம், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த ஹரிதாஸ் அருகில் கிடந்த கட்டையால் கோபாலை கடுமையாக தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிதாஸை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.