சென்னை

தமிழகம், 3 மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

தமிழகம், 3 மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

தினமணி செய்திச் சேவை

தமிழகம், குஜராத், ராஜஸ்தான், நாகாலாந்து ஆகிய 4 மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதற்காக 1956, நோட்டரீஸ் சட்டத்தில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி திருத்தம் மேற்கொண்டுள்ளது.

முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க முக்கிய ஆவணங்களின் சாட்சிகளை அங்கீகரிக்கும் நபா்களாக நோட்டரிகள் நியமனம் செய்யப்படுகிறாா்கள். இவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மக்கள்தொகை வளா்ச்சி, மாவட்டங்கள், வட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நோட்டரி சேவைக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,500-ஆக உள்ள நோட்டரிகளின் எண்ணிக்கை 3,500-ஆக அதிகரிக்கப்படுகிறது. குஜராத்தில் 2,900-லிருந்து 6,000-ஆகவும், ராஜஸ்தானில் 2,000-லிருந்து 3,000-ஆகவும், நாகாலாநந்தில் 200-லிருந்து 400-ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT