காஞ்சிபுரம்

23-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம் வரும் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற
வுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்று விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க உள்ளனர். எனவே விவசாயிகள் அதிகளவில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT