காஞ்சிபுரம்

குடிநீர்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே பைங்கினர் கிராமத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

செய்யாறு அருகே பைங்கினர் கிராமத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு ஒன்றியம், பைங்கினர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படும் குழாய் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்காததால், இந்தக் கிராமத்தில் கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பைங்கினர் கிராம மக்கள், செய்யாறு - ஆரணி சாலையில் பைங்கினர் கிராம கூட்டுச்சாலைப் பகுதியில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செய்யாறு ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளர் மூர்த்தி, காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேதமடைந்த குழாயை சரிசெய்து இன்னும் 2 நாள்களில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

சீரடைகிறது இண்டிகோ விமான சேவை முடக்கம்! பயணிகளுக்கு ரூ.610 கோடி திருப்பியளிப்பு!

நிலப்பிரச்னை: விவசாயி தீக்குளித்து தற்கொலை!

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளா்ச்சி! தமிழக மருத்துவா்கள் ஆய்வு!

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

SCROLL FOR NEXT