காஞ்சிபுரம்

ஜெர்மன் பெண் பலாத்கார வழக்கு: 4 பேரிடம் போலீஸார் விசாரணை

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெசினா (35), கடந்த மாதம் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். இங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேர் ஜெசினாவை பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ஜெர்மன் நாட்டு தூதுவர்களும் வந்து விசாரணை நடத்தினர்.
கடந்த ஒன்றரை மாதங்களாக சுமார் 17-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இருப்பினும், குற்றவாளிகளை கண்டறிவது போலீஸாருக்கு கடும் சவாலாக இருந்தது.
இந்நிலையில், பட்டிப்புலத்தைச் சேர்ந்த குதிரை சவாரி செய்யும் இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காசிமேட்டைச் சேர்ந்த 4 பேர் தான், ஜெசினாவை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 'இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். தற்போது பிடிபட்டுள்ள 4 பேரின் புகைப்படத்தையும் ஜெசினாவுக்கு அனுப்பியுள்ளோம். அவர் அதனைப் பார்த்துவிட்டு தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

SCROLL FOR NEXT