உத்தரமேரூர் வட்டம், சாலவாக்கம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் டி.குமார் தலைமை வகித்தார். வர்த்தக அணி அமைப்பாளர் சின்னாலம்பாடி ரவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பொதுக்குழு உறுப்பினர் ஜனனி ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞரணி அமைப்பாளர் மணி வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர் பங்கேற்று பேசினார். இதில், சட்டப்பேரவை உறுப்பினராக வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிப்பது, ஒன்றியப் பகுதிகளில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.