கண் தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்றோர். 
காஞ்சிபுரம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

காஞ்சிபுரம் அகர்வால் கண் மருத்துவமனை, சங்கர் கண் வங்கி, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கண்தானம் குறித்த விழிப்புணர்வு

DIN

காஞ்சிபுரம் அகர்வால் கண் மருத்துவமனை, சங்கர் கண் வங்கி, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கண்தானம் குறித்த விழிப்புணர்வு
மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. 
அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையில் இருந்து அண்ணா அரங்கம் வரை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. 
காஞ்சிபுரம் டி.எஸ்.பி. முகிலன் மனிதச் சங்கிலியை தொடங்கி வைத்தார். சங்கர் கண் வங்கித் தலைவர் சங்கரன் கண்தானம் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். இறந்த பிறகு கண்களை தானம் செய்வதன்
மூலம் இரண்டு பேர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கலாம் என்றார்.
இந்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் மா.அன்பு, இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் தலைவர் விக்டோரியா, முன்னாள் தலைவர் பி.டி.சரவணன், காஞ்சிபுரம் ஹெலன்
கெல்லர் அரிமா சங்கத் தலைவர் சபிதா கிரி உள்ளிட்ட பலர் இந்த கண் தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT