காஞ்சிபுரம்

நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றுங்கள்: கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள்

DIN


காஞ்சிபுரம் மாவட்டத்தை முழுவதும் நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே.மிஷ்ரா அனைத்துத் துறை அலுவலர்களிடம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரத்தில் அனைத்துத்துறைகளின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை  ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் கே.மிஷ்ரா தலமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
 ஆட்சியர் பா.பொன்னையா, வருவாய் அலுவலர் ந.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சந்தோஷ் கே.மிஷ்ரா பேசியது: ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் செயல்பாடு ஆகியன குறித்து புகார்கள் வராமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளை ஆழப்படுத்தி குடிமராமத்துப் பணிகள் செய்யும் திட்டம் தமிழக முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மேலும் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், புனரமைக்கவும் தமிழ்நாடு நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கம் என்னும் சிறப்புத் திட்டத்தையும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.   
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை  ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை வருகின்ற வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்  எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 
முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்துப் பகுதி மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, முழுமையாக நெகிழிப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும் என்றார் அவர். 
இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்துக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ஜான் லூயிஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், சார்-ஆட்சியர் எஸ்.சரவணன், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் முஜிபுர் ரகுமான்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT