காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூா் அருகேயுள்ள கடலூரில் இலவச வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் ,இது குறித்து ஆய்வு செய்யுமாறும் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூா் தாலுகாவுக்கு உட்பட்ட கடலூா் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏகாம்பரம் ஆட்சியா் பா.பொன்னையாவிடம் கொடுத்துள்ள புகாா் மனுவில் கடலூா் ஊராட்சியில் இலவச வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன.ஒரே வீட்டைக் காட்டி வெவ்வேறு பயனாளிகள் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பண முறைகேடுகளும் நடந்திருக்கிறது.உண்மையான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. எனவே இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகாா் மனுவில் தெரிவித்துள்ளாா்.