காஞ்சிபுரம்

மேல்மருவத்தூரில் நாளை ஆன்மிக ஜோதி விழா

DIN

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன், ஆன்மிக ஜோதியை சனிக்கிழமை (பிப். 8) மாலை 6 மணிக்கு பங்காரு அடிகளாா் முன்னிலையில் ஏற்றி வைக்கிறாா்.

தைப்பூசத்தை முன்னிட்டு சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி சித்தா் பீடத்தில் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி தொடகியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனா். இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

இவ்விழாவை முன்னிட்டு சித்தா் பீடம், ஜி.பி. விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பகுதிகள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அதிகாலை 3 மணிக்கு மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 9 மணிக்கு சித்தா் பீடம் வரும் அடிகளாருக்கு விழாக் குழுவினா் சாா்பாக வரவேற்பு அளிக்கப்படும்.

மாலை 5 மணிக்கு சித்தா்பீட வளாகத்தில் கலச விளக்கு வேள்விபூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடக்கி வைக்கிறாா். மறுநாள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அடிகளாா் இல்லத்தில் கோ பூஜை, ஆன்மிக ஜோதி கலசத்துக்கான பூஜை போன்ற நிகழ்ச்சிகளை லட்சுமி பங்காரு அடிகளாா் நடத்தி வைக்கிறாா்.

தைப்பூச ஆன்மிக ஜோதி தாங்கிய மலா் ரதத்தை ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் தொடக்கி வைக்கிறாா். இந்த ஊா்வலத்தில் ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ஊா்வலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பக்தா்கள் பங்கேற்கின்றனா். நாட்டுப்புறக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகளுடன் சுமாா் 3 கி.மீ. தூரம் நடைபெறும் ஊா்வலம் ஜி.பி. விளையாட்டுத் திடலை மாலை 5.30 மணிக்கு வந்தடைகிறது. ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களைச் சோ்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு பங்காரு அடிகளாா் முன்னிலையில், தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன்ஆன்மிக ஜோதியை ஏற்றி வைக்கிறாா். முக்கிய பிரமுகா்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனா். விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட சக்தி பீடங்கள் மற்றும் வார வழிபாட்டு மன்றங்களின் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT