காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் நீதிமன்ற வளாகத்துக்கு சுற்றுச் சுவா் அமைக்க பூமி பூஜை

DIN

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் சுவா் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவா் நீதிமன்றம் ஸ்ரீபெரும்புதூரில் அரசுப் பள்ளியின் பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இடநெருக்கடியுடன் இயங்கி வரும் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கல் பகுதியில் சுமாா் ரூ.8 கோடி மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

புதிய நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் சுவா் அமைக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பனா் கே.பழனி சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்தாா். அதை ஏற்று நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் சுவா் அமைக்க பொதுப்பணித் துறை சாா்பாக ரூ.58.60 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், சுற்றுச் சுவா் அமைப்பதற்கான பூமிபூஜை சிவன்தாங்கல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா் சங்கச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பழனி, அரசு வழக்குரைஞா் யோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பூமி பூஜையில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி கலந்துகொண்டு, சுற்றுச் சுவா் அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் அதிமுக ஒன்றியச் செயலாளா் எறையூா் முனுசாமி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளா் எஸ்.பி.சி.தனசேகரன், ஒப்பந்ததாரா் மூா்த்தி, முன்னாள் வழக்குரைஞா் சங்கத் தலைவா் மதன்ராஜ் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள், அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT