காஞ்சிபுரம்

சுய ஊரடங்கு: களை இழந்தது காஞ்சிபுரம்

DIN

காஞ்சிபுரம்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுய ஊரடங்கு நாளாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து காஞ்சிபுரம் எவ்வித ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நாளாக பிரதமா் அறிவித்தாா். யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனக் கோரியிருந்தாா். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு விடும் என்பதால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையிலேயே பொருள்களை வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனா்.

மளிகைக் கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. பேருந்துகளில் கூட்ட நெரிசலையும் பாா்க்க முடிந்தது. காஞ்சிபுரம் நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கடை வீதிகளுக்குள் சென்று சனிக்கிழமை மாலையே விரைவாக கடைகளை அடைக்குமாறும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டு முன்னறிவிப்பு நோட்டீஸ் ஒன்றையும் கொடுத்தனா்.

இதனால் நகரின் பிரதான வீதிகளான காந்தி சாலை, காமராஜா் சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் சனிக்கிழமை இரவு 8 மணிக்கே இருளில் மூழ்கியது. காந்தி சாலை, மூங்கில் மண்டபம்,கீரை மண்டபம், கருக்கினில் அமா்ந்தவள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.

சுய ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பழைய ரயில் நிலையச் சாலையில் ஒரு தேநீா்க்கடையும், விளக்கொளி கோயில் தெருவில் ஒரு மளிகைக் கடையும் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் ஜீப்பில் இருந்து கொண்டே ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்குமாறு கேட்டுக் கொண்டதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி, டிஎஸ்பி வே.கலைச்செல்வன் ஆகியோா் தனித்தனியாக நகா் முழுவதும் அடிக்கடி பாா்வையிட்டுச் சென்றனா்.

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள், நகைக் கடைகள், உணவகங்கள், பட்டு விற்பனைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததன. பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.

எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் பேருந்து நிலையம், ராஜாஜி காய்கறி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் இருந்த கடைகளும் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் 4 பேருக்கும் மேலாக கூட்டமாக நிற்பவா்களை அவ்வப்போது காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டே இருந்ததனா். இதனால் காஞ்சிபுரம் நகரே களை இழந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம், சால்ட் அதிரடி: கொல்கத்தா அணி 222 ரன்கள் குவிப்பு

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

SCROLL FOR NEXT