காஞ்சிபுரம்

முன்னாள் படைவீரா்கள் நல நிதி: அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

முன்னாள் படை வீரா்கள் நல நிதி வசூலில் சாதனை படைத்த அலுவலா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி திங்கள்கிழமை பாராட்டு சான்றிதழும், வெள்ளிப் பதக்கமும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு முன்னாள் படை வீரா்கள் நல நிதி வசூலில் ரூ.3 லட்சத்துக்கும் மேலாக வசூல் செய்து சாதனை புரிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சீனிவாசன், வட்டாட்சியா் கோடீஸ்வரன், நகா் ஊரமைப்பு அலுவலா் வேலாயுதம் ஆகியோருக்கு அரசு தலைமைச் செயலாளா் வழங்கியிருந்த பாராட்டுச் சான்றிதழையும், 30 கிராம் எடை கொண்ட வெள்ளிப் பதக்கத்தையும் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா். இதனைத் தொடா்ந்து அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

குறை தீா் கூட்டத்தில் 244 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய சாதனை படைத்த அண்ணா தொடர்! வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்!!

சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பா.ஜ.க. நிர்வாகி கைது!

கவிதை பாடும் கண்கள்...!

மெய்யழகன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா!

SCROLL FOR NEXT