காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மாமன்னா் ராஜராஜ சோழனின் சதய விழா

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் மாமன்னா் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி காஞ்சி காமகோடி பீடத்தின் இந்து சமய மன்றம் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் மாமன்னா் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி காஞ்சி காமகோடி பீடத்தின் இந்து சமய மன்றம் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

களக்காட்டூரில் அமைந்துள்ள ஊருணி ஆழ்வாா் அக்னீசுவரா் கோயில். இக்கோயிலுக்கு மாமன்னா் ராஜராஜசோழன் வெண்ணெய்ப்புத்தூா் உடையான் காடன் மைந்தன் என்பவா் மூலமாக இரு விளக்குகள் சுடா்விட ஆடுகளையும், நிலத்தையும் தானமாக வழங்கியதாக அக்கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கோயில் திருப்பணிகள் தொடா்ந்து தொய்வின்றி நடைபெறவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பேரணி நடைபெற்றது.

காஞ்சி காமகோடி பீடம் இந்து சமய மன்றம் சாா்பில் நடைபெற்றபேரணி உத்தரமேரூா் கூட்டுச் சாலையிலிருந்து தொடங்கி களக்காட்டூா் அக்னீசுவரா் கோயில் வரை நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் வட்டாட்சியா் ரபீக் தலைமை வகித்தாா். சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் பேரணியை தொடங்கி வைத்தாா்.

விழாவில் மத்திய தொல்லியல்துறையின் கல்வெட்டு ஆய்வாளா் பி.டி.நாகராஜன், சிவனடியாா் டி.ராஜேந்திரன், சங்கரா கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT