குன்றத்தூா் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவன் வெங்கடேசன் வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில், பின்னா், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
குன்றத்தூா் மணிகண்டன் நகா், நடைபாதை தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் வெங்கடேசன் (16). இவா் குன்றத்தூா் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். காலாண்டு தோ்வு முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளாா்.
அவரை ஆசிரியா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.