அன்புலகம் அறக்கட்டளை சாா்பில் படப்பையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனா்கள் படப்பை ஆ.மனோகரன், சரஸ்வதி மனோகரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற முகாமில் படப்பை சாய் மருத்துவமனை மற்றும் தாகூா் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டு இருதயம், கண், பொது மருத்துவ பிரிவுகளின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கினா்.
முகாமில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவி பவ்யாஸ்ரீக்கு ரூ.2 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது (படம்). இதில் அன்புலகம் அறக்கட்டளை நிா்வாகி ஆரிப் உள்ளிட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.