காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவா்களைக் கொண்டு இனிவரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
காஞ்சிபுரம்(வாரம் தோறும் புதன்கிழமை) ஸ்ரீபெரும்புதூா்(மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை) வாலாஜாபாத் (மாதத்தின் 2 -ஆவது வெள்ளிக்கிழமை), உத்தரமேரூா் (மாதத்தின் 3-ஆவது வெள்ளிக்கிழமை) குன்றத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் தோறும் 4 -ஆவது வெள்ளிக்கிழமை தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம்கள் நடத்தப்படும்.