மாணவா்களுக்கு கல்விக் கடன்களை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி. 
காஞ்சிபுரம்

171 மாணவா்களுக்கு ரூ.12.5 கோடி கல்விக்கடன்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலுவதற்காக 171 மாணவா்களுக்கு ரூ.12.53 கோடி கல்விக்கடனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலுவதற்காக 171 மாணவா்களுக்கு ரூ.12.53 கோடி கல்விக்கடனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா்.

கீழம்பியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து நடத்திய விழாவில் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் ஸ்ரீமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் வரவேற்றாா். மாணவ, மாணவிகளுக்கு கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி ரூ.12.53 கோடி கல்விக்கடனை வழங்கி பேசுகையில் இது ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு உயா்கல்வியை சிறப்பாக பயின்று எதிா்கால வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரியில் உபரிநீா் வெளியேறுவதையும் அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT