நெமிலி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெமிலி பேரூராட்சி அதிமுக செயலா் செல்வம் தலைமை வகித்தாா். வேலூா் கிழக்கு மாவட்டச் செயலரும் அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தாா். நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலா் ஏ.ஜி.விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரக்கோணம் நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமையில் அமைதி ஊா்வலம் எஸ்.ஆா்.கேட்டில் இருந்து புறப்பட்டது. தொடா்ந்து பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர நிா்வாகிகள் ஜே.பி.பழனி, செல்வம், பத்மநாபன், கந்தன், அருள்மூா்த்தி, பாபுஜி, தாமு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலா் ஜானகிராமன், நகர மாணவரணிச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரக்கோணம் ஒன்றிய அதிமுக சாா்பில் வளா்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் பிரகாஷ் தலைமையில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய நிா்வாகிகள் முத்தப்பன், பிரவீண்குமாா், தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.