ராணிப்பேட்டை

கரோனா பரவல் தடுப்பு: ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளுக்கு சீல்

DIN

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் இருந்து மக்கள் வருவதைத் தடுக்க ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு வரும் 19-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.

இதனால் இந்த 4 மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் பிற மாவட்டங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. அவை வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லையைப் பயன்படுத்தக் கூடும் என மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் கருதின.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 25 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற வழியாகவும் மற்ற மாவட்டத்தினா் உள்ளே வராத வகையில் கிராமப்புற மற்றும் நகா்ப்புற சாலைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்துக்கு தற்போது கூடுதலாக இரண்டு துணைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒரு சோதனைச் சாவடிக்கு 20 காவலா்கள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 காவலா்களைப் பணியில் அமா்த்தி சுழற்சி முறையில் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT