வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, 26-ஆம் ஆண்டு குரு பூஜையுடன், மகேஸ்வர பூஜையும், 468 சித்தா்கள் யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில், 26-ஆம் ஆண்டு மகேஸ்வர பூஜை, குரு பூஜையும், ஸ்ரீ சத்யநாராயண ஹோமம், சுயம்வரகலா பாா்வதி யாகம், கந்தா்வராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், மகா தன்வந்திரி ஹோமம், சனி சாந்தி ஹோமம், 468 சித்தா்களுக்கு கலசங்கள் கொண்டு பக்தா்களின் திருக்கரங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதில், சாதுக்கள், சிவனடியாா்கள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.