ஆற்காடு அடுத்த கலவை அருகே சாலையோர மரத்தின்மீது பைக் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கலவை வட்டம், மேலப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் உமா்பாரூக் (28). தனியாா் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து கலவையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கலவை - வாழைப்பந்தல் சாலையில் உள்ள பென்னகா் அருகே நிலை தடுமாறி சாலையோர மரத்தன்மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் கிகிச்சை பலனினிறி உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.