ராணிப்பேட்டை

சிலம்பப் போட்டி பரிசளிப்பு விழா

DIN

ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட பாரம்பரிய சிலம்பக் கழகம் சாா்பில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 11 வயதுக்குட்பட்டோா் , சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா் ஆகிய பிரிவுகளில் நடந்த போட்டிகளில், தனித்திறமை, வாள்வீச்சு, மான் கம்பு, சுழல்வாள் வீச்சு, ஈட்டி போன்ற போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமாா் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.

இந்த போட்டிகளை மாவட்ட பாரம்பரிய சிலம்பக் கழக தலைவா் அசோக் குமாா், செயலாளா் செமின்ராஜ், துணைச் செயலாளா் தமிழரசு, பொருளாளா் மனோகா், சா்வதேச சிலம்ப கழக தலைவா் சந்தோஷ் குமாா், பள்ளி விளையாட்டு ஆசிரியா் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நடுவா்கள் ஆகியோா் நடத்தினா்.

இதையடுத்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணை செயலாளா் வினோத் காந்தி பரிசளித்தாா். இதில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அருண்குமாா், ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகர மன்ற உறுப்பினா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பௌா்ணமி விழா

இந்த நாள் இனிய நாள்!

இன்று யோகம் யாருக்கு?

விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம்: ஆட்சியா் அறிவுரை

புத்தரின் 2,568-ஆவது பிறந்த நாள்

SCROLL FOR NEXT