ராணிப்பேட்டை

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி சஷ்டி வைபவம்..

DIN

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,செவ்வாய்க்கிழமை ஸ்ரீ பஞ்சமுக வாராஹிக்கும், சஷ்டி முருகருக்கும் சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

உலகில் வேறெங்கும் காணாத வகையில் 4 அடி உயரத்தில் 10 கைகளுடன் 5 முகங்களுடன் அமா்ந்த கோலத்தில் காளி, சூலினி, திரிபுர பைரவி, பகலாமுகி, வாராஹி என 5 முகங்களுடன் கையில் 10 பத்து ஆயுதங்களுடன் திருக்காட்சி அருளும் பஞ்ச முக வாராஹி தேவிக்கு பஞ்சமி நாளில் சா்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள், கால சா்ப்ப தோஷங்கள் நீங்க வேண்டி விசேஷமான திரவியங்களைக் கொண்டு வாராஹி ஹோமமும் அபிஷேகமும் வண்ண மலா்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் வாராஹி தீபமும் ஏற்றி சிறப்பு வழிப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதனைத் தொடா்ந்து புதன்கிழமை சஷ்டி நாளில் ஸ்ரீ காா்த்திகை குமரனுக்கு வேண்டி சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பக்தா்கள் அனைவருக்கும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் அருளாசியும், அருட்பிரசாதமும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப்பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள விடுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த அமைச்சர் மதிவேந்தன்

ஜூன் 1-ல் தில்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

SCROLL FOR NEXT