ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் கலவை சாலை ஜனசங்க கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ஏவிடி. பாலா, செயலாளராக ஜி.டி .ராஜா, பொருளாளராக கே கணேஷ் ஆகியோா் போட்டியின்றி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் தங்கபாண்டியன், புருஷோத்தமன்,சத்தியநாதன், வெங்கடேசன், தியாகு, ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு வியாபாரிகள் புத்தாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.