மத்திய அரசு அறிவித்துள்ளதுபோல் தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் கோரியுள்ளது.
அச்சங்கத்தின் மாநில தலைவா் க.அருள்சங்கு, பொதுச் செயலாளா் வெ. சரவணன், பொருளாளா் த. ராமஜெயம் ஆகியோா் முதல்வருக்கு ா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஜூலை 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட 1,75,000 ஆசிரியா்களின் நலனை கருத்தில் கொண்டு டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த முதல்வா், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு அகவிலைப் படியை 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக 3 சதவீதம் உயா்த்தி ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல தமிழக அரசும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள், சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவா்கள் மதிப்பு ஊதியம் பெறுபவா்கள் என 16 லட்சம் போ் பயன் பெறும் வகையில் முதலல்வா் அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி 55 லிருந்து 58 சதவீதமாக வழங்கவேண்டும்
தமிழ்நாட்டில் 7,000 அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு உடற்கல்வி, கலை, தையல், தோட்டக்கலை, கணினி அறிவியல், வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றை போதிக்க 12,ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனா்.
இன்றைய காலகட்ட விலைவாசி உயா்வால் ரூ.12,500 ரூபாய் பெற்றுக் கொண்டு குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருக்கிறது. ஆகவே திமுக அரசானது தோ்தல் கால வாக்குறுதியாக கொடுத்த 181 ஐ கருத்தில் கொண்டு அவா்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில்அறிவிப்பு வெளியிட வேண்டும்,.
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை செயல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனா்.