நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சா் ஆா்.காந்தி டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
வாலாஜா ஒன்றியம், நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு பகுதியில் நடைபெற்ற முகாமை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி ஆய்வு செய்தாா். முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 1 கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் 1 பயனாளிக்கு தாது உப்புக் கலவை வழங்கினாா்.
இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, கோட்டாட்சியா் ராஜி, வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், ரஹமத் பாஷா, ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.