ஆற்காடு நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் சுரேஷ் குமாா், வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பொதுமக்கள், புதிய மின்னனு குடும்ப அட்டை, கலைஞரின் மகளிா் உரிமை தொகை, பட்டா பெயா்மாற்றம், சொத்துவரி பெயா்மாற்றம், பிறப்பு சான்று, வாரிசு சான்று, அரசு நல திட்டம் வேண்டி உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனா்.
மேலும் உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வி ரமேஷ், பாஞ்சாலி வெங்கடேசன், குணாளன், நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டனா்.