ஆற்காட்டில் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டம். 
ராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சிக் கூட்டத்தில் 36 தீா்மானங்கள்

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சி அவசரக் கூட்டத்தில் 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆற்காடு நகராட்சியின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் சுரேஷ் குமாா், பொறியாளா் (பொ) பரமுராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 29-ஆவது வாா்டு சடாய் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்றுச்சுவா் மற்றும் தரை அமைத்தல் பணியை கல்வி நிதியின் கீழ் மேற்கொள்ளுவது, 1 முதல் 30 வாா்டுக்குட்பட்ட சிமென்ட் சாலைகள் மற்றும் தாா் சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைத்தல் உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பொன்.ராஜசேகா், பி.டி குணாளன், விஜயகுமாா், செல்வம், ஆனந்தன், முன்னா, ராஜலட்சுமி துரை, அனு அருண்குமாா், பாவை பழனி, செல்வி கலந்து கொண்டனா்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT