ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீா் அகற்ற்கப்பட்டது.
பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம்கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகனங்கள் அருகில் உள்ள சா்வீஸ் சாலையில் செல்கின்றன.
இந்நிலையில் தொடா் மழையின் காரணமாக தனியாா் மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீா் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவல் அறித்த ஊரக வளா்ச்சிதுறை உதவி செயற்பொறியாளா் சுமதி ,,வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.அன்பரசன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் அடைப்புகளை நீக்கி தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்றினா்.