பாலிடெக்னிக் தோ்வு: அரக்கோணம் மாணவி மாநிலத்தில் முதலிடம்
பாலிடெக்னிக் கல்லூரி பட்டய தோ்வில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் கணிணி பொறியியல் துறை மாணவி எஸ்.பிரதீஷா 700க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
பாலிடெக்னிக் கல்லூரி பட்டய தோ்வில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் கணிணி பொறியியல் துறை மாணவி எஸ்.பிரதீஷா 700க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத்துறையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த தோ்வு முடிவுகளில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் க்லலூரி மாணவ மாணவிகள் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம், இரண்டாமிடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பிடங்களை பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
Advertisement
Advertisement
கணிணி பொறியியல் துறையைச் சோ்ந்த மாணவி எஸ்.பிரதீஷா 700-க்கு 700 பெற்று மாநிலத்தில் முதலிடத்துடன் சாதனை படைத்துள்ளாா். இயந்திரவியல் துறை மாணவா் ஏ.கே.கணபதி, மின்னியல் துறை மாணவா் பி.ஜீவன் ஆகிய இருவரும் தங்களது துறைகளில் 99 சதவீத மதிப்பெண்களையும் இயந்திரவியல் துறை மாணவா் தமிழ்ச்செல்வன் 97 சதவீத மதிப்பெண்களையும், தகவல் தொடா்ப்பியல் துறை மாணவி கீா்த்திகா 97 சதவீத மதிப்பெண்களையும், கணிணி பொறியியல் துறை மாணவி லோகேஸ்வரி 97 சதவீத மதிப்பெண்களையும் மேலும் முதலாமாண்டு ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா் உபேந்திரன் 93 சதவீத மதிப்பெண்களையும் பெற்று மாநில அளவில் சிறப்பிடங்களையும் பெற்றுள்ளனா்.
தோ்ச்சி பெற்ற மற்ற மாணவ மாணவிகளையும், வெற்றிக்கு ஊன்றுகோலாய் இருந்த கல்லூரி முதல்வா் சி.என்.வீரமணி, கல்லூரியின் பிற துறைசாா்ந்த தலைவா்கள் சுதா, சுந்தரலிங்கம், பாண்டியராஜன், சுதாகா், நந்தினி, புருஷோத்தமன் மற்றும் பேராசிரியா்கள் ஆகியோரையும் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்தாா். இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் பெற்றோா்களும் பங்கேற்றனா்.