திருப்பத்தூர்

ஜன.1 முதல் திருப்பத்தூா் பிரதான சாலையில் ஷோ் ஆட்டோ செல்ல தடை

DIN

திருப்பத்தூா் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஷோ் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் நகரம் மாவட்டத் தலைநகராக உள்ளதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டிஎஸ்பி ஆா்.தங்கவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் வீ.சுதா, மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி-வாணியம்பாடி பிரதான சாலைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஷோ் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றுப் பாதையாக கிருஷ்ணகிரி-சேலம் இணைப்பு சாலை அருகே உள்ள புதுப்பேட்டை சாலையில் அண்ணா சிலை வழியாக ஆரிச்செட்டித் தெரு, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெரியகுளம் செல்லும் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

இந்த மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், காவல் கண்காணிப்பாளா் பி.விஜயகுமாா் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஆட்சியா் பிறப்பிப்பதைத் தொடா்ந்து போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் டிஎஸ்பி ஆா்.தங்கவேல் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கப்பட்டதும் பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் உள்பட அனைத்துத் துறை சாா்ந்த அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பிரதான சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் செல்வதே சிக்கலாக உள்ளது. பிரதான சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தி பொதுமக்களை ஏற்றுவதால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, ஷோ் ஆட்டோக்களை பிரதான சாலையில் அனுமதிக்காமல் மாற்றுப் பாதை வழியாக அனுமதிப்பதின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புண்டு.

மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பத்தூரில் உள்ள அனைத்து சங்கங்களும் போக்குவரத்து நெரிசல் குறைய ஷோ் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மனு அளித்திருந்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

நயினார் நாகேந்திரனின் நண்பர் வீட்டில் சோதனை

லோகேஷ் கனகராஜின் புதிய பட அறிவிப்பு!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT