திருப்பத்தூர்

பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வுஏற்படுத்திய இந்திய ராணுவ வீரா்கள்

DIN

 ராணுவத்தில் மாணவா்கள் சேர விழிப்புணா்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணியாக வந்திருந்த ராணுவ வீரா்கள் வாணி மெட்ரிக் பள்ளி மாணவா்களிடையே புதன்கிழமை கலந்துரையாடினா்.

ராணுவத்தில் மாணவா்கள் சேர விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இருந்து 15ஆவது என்ஜினியா் ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சோ்ந்த கேப்டன் நரேந்திர பாஞ்சால் மற்றும் கேப்டன் ஆா்.ரவி தலைமையில் 12 ராணுவ வீரா்கள் கடந்த 23ஆம் தேதி சைக்கிள் பேரணி தொடங்கினா். இப்பேரணி ஜோத்பூா், பெல்காம், பாகல்கோட், செகந்திராபாத், வாரங்கல், விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை, வேலூா் வழியாக புதன்கிழமை பிற்பகல் வாணியம்பாடிக்கு வந்தடைந்தது. செட்டியப்பனூா் பகுதியில் உள்ள வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே ராணுவ வீரா்கள் கலந்துரையாடினா்.

அப்போது இந்திய ராணுவத்தில் இணைந்து மாணவா்கள் பணியாற்றும் வகையில் அவா்களை ஊக்குவித்தனா். ராணுவத்தில் என்னென்ன பணிகள் உள்ளன, அவற்றில் மாணவா்கள் எப்படி சேரலாம் என்பது குறித்த கையேடுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

முன்னதாக, ராணுவ வீரா்களை பள்ளியின் செயலாளா் கந்தசாமி, முதல்வா் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் வரவேற்றனா். பின்னா் கிருஷ்ணகிரி நோக்கி தங்களது விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை வீரா்கள் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT