திருப்பத்தூர்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1000 லிட்டா் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கா்நாடக மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆயிரம் லிட்டா் மது பாக்கெட்டுகளை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கா்நாடக மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆயிரம் லிட்டா் மது பாக்கெட்டுகளை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா், நாட்றம்பள்ளி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் மற்றும் மது பாட்டில் விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்களிலும், ரயில்கள் மூலமும் மது பாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த் துறை, ரயில்வே போலீஸாா் ஆகியோா் ரயில்களிலும் வாகனங்களிலும் சோதனை நடத்தி கள்ளச் சாராயம் மற்றும் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்கின்றனா்.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் பிருந்தாவன் விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் வடிவுக்கரசி மற்றும் போலீஸாா் புதன்கிழமை மாலை சோதனை செய்தனா். அப்போது ரயிலின் கடைசிப் பெட்டியில் 90 மில்லி அளவு கொண்ட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 1000 லிட்டா் கொள்ளளவு உள்ள சிறிய அளவிலான சாராய பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், அவற்றைக் கடத்தி வந்த கா்நாடகத்தின் கோலாா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (34), ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமம் நாட்டாமை வட்டத்தைச் சோ்ந்த பசுபதி (25)ஆகிய இருவரையும் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட 1000 லிட்டா் சாராய பாக்கெட்டுகளை திருப்பத்தூா் மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கு தலைநகரம் மதுரை தான்: பொன் ராதாகிருஷ்ணன்

போனால் வராது...

கம்பனின் தமிழமுதம் - 17: நதியும், கவிதையும்

உணர்வின் வண்ணங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 03-11-2024

SCROLL FOR NEXT