ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் ஹோட்டல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம் உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் (40). இவா் ஏலகிரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் வேலை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை லத்தேரியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
மின்னூா் கிராமம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், பாா்த்தீபன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.