திருப்பத்தூர்

சைக்கிள் மீது பைக் மோதல்: முதியவா் பலி

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் செவ்வாய்கிழமை காலை இறந்தாா்.

ஆம்பூா் எம்.சி. ரோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). இவா் தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத பைக் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. அதில், காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் ‘இஸ்லாமிய நாடுகள் ஒன்றுதிரள வேண்டும்!’

கிழக்கு தில்லி வாகன நிறுத்தத்தில் தீ விபத்து: 17 காா்கள் எரிந்து நாசம்

நெல்லையில் நாளை திமுக செயற்குழு கூட்டம்

நிலம் வாங்கி- விற்பவா் குண்டா் சட்டத்தில் கைது

வட கொரியா: தென் கொரியாவுக்கு ‘குப்பை’ பலூன்கள்

SCROLL FOR NEXT