திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடிக் கட்டடத்தை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதையடுத்து, எலவம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடமாடும் மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளைப் பாா்வையிட்டாா்.
முன்னதாக, திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டடத்தை அகற்றும் பணியைப் பாா்வையிட்டாா்.
ஆய்வுகளின்போது, எம்எல்ஏ அ.நல்லதம்பி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், சித்ரகலா, எலவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா விவேகானந்தன், துணைத் தலைவா் ஆனந்தன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.