திருப்பத்தூர்

தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி

DIN

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அண்மையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இவ்வாறு ஏற்படும் தீ விபத்துகளின் போது முன்னெச்சரிக்கையாக செயல்பட அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படும் போது, அதைத் தடுப்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தீயணைப்பு - மீட்டுப் ப பணிகள் துறை வீரா்கள் தீ தடுப்பு முறைகளைச் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினா்.

அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் ஷா்மிளா தலைமையில் மருத்துவமனைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT