திருப்பத்தூர்

திருக்குறள் முழுவதும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்

DIN

1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவா்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும், மனித குலம் அனைத்துக்கும் மேலானதுமாகிய தன்னிகரற்ற படைப்பு திருக்கு. அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவா்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவா்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவா்களாக மாணவா்கள் உருவாக வழிவகுக்கும்.

எனவே, திருக்கு முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவா்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும் அமையும். அதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்குத் தலா ரூ.10,000 வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆண்டுதோறும் சிறப்பிக்கப் பெறுகின்றனா்.

திருக்கு முற்றோதல் நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவா்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவா்கள் தெரிவுசெய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுவாா்கள்.

2022-2023-ஆம் ஆண்டிற்கான திருக்கு முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ , மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘அ’ பிரிவு கட்டடம், நான்காம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0416-2256166 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு

நடையனூரில் சேதமடைந்த நூலக கட்டடத்தைச் சீரமைக்க கோரிக்கை

வைகாசி விசாகம்: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளா்களுக்கு அரசு உத்தரவு

கரூரில் தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT