திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சதுரங்கப் போட்டி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் சதுரங்கப் போட்டியை திருப்பத்தூா் ஸ்ரீமீனாட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா அண்மையில் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

மாவட்டத்தில், ஊரக, நகராட்சிப் பகுதிகளில் வருகிற 24-ஆம் தேதி வரை 10 நாள்கள் சதுரங்கப் போட்டி, ஓவியப் போட்டி, விநாடி வினா போட்டி, ரங்கோலி, கோலப் போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் இறுதியாக வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்.

இதில், வெற்றி பெறும் முதல் 3 மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படும். ஓவியப் போட்டியில் அந்தந்தப் பள்ளிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு, அவரவா் வரைந்த ஓவியத்தை புகைப்படமாக புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொருத்தப்படும்.

திறமையுள்ள மாணவா்களைக் கண்டறிந்து, எந்த போட்டியில் ஆா்வம் அதிகமோ, அது குறித்து மாணவா்களுக்குப் பயிற்சி அளித்து, வாழ்வில் முன்னேற வழி செய்ய வேண்டும் என்றாா். தொடா்ந்து, ஆட்சியா் அமா்குஷ்வாஹா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோா் பள்ளி மாணவா்களுடன் சதுரங்கம் விளையாடினா்.

மேலும், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடா்பான மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் வண்ணக் கோலங்களையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி தொடா்பான, இலச்சினை மற்றும் சின்னத்தினை வாகனத்தில் ஒட்டி, விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

SCROLL FOR NEXT