திருப்பத்தூர்

ஒன்றிய அளவிலான அரசு ஊழியா்களுக்கு நாளை மருத்துவப் பரிசோதனை முகாம்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அரசு ஊழியா்களுக்கு வியாழக்கிழமை (அக். 20) மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட திருப்பத்தூா், ஆலங்காயம், கந்திலி, ஜோலாா்பேட்டை நாட்டறம்பள்ளி, மாதனூா் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வியாழக்கிழமை (அக்.20)மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம்களில், சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயத்தில் ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அவிநாசியில் ஆா்எஸ்எஸ் பேரணி

திருப்பூா் பாலா ஆா்த்தோ மருத்துவமனையில் லண்டன் நோயாளிக்கு லேசா் சிகிச்சை

காலமானாா் ஜி.லட்சுமி

நிலம் வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் ரூ.59.16 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT