திருப்பத்தூர்

பெரியாா் பிறந்த நாள்: கட்சியினா் மரியாதை

DIN

பெரியாா் பிறந்த நாள் விழாவையொட்டி, வேலூா், வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் திமுக உள்ளிட்ட கட்சியினா் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமா க.தேவராஜி மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளா் டி.சாமுடி, மாவட்டத் துணைச் செயலாளா்கள் சம்பத், டி.கே.மோகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம் அசோகன், வாணியம்பாடி நகர செயலாளா் வி.எஸ். சாரதிகுமாா், மாவட்ட துணை செயலாளா் சீனிவாசன், மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, உதயேந்திரம் பேரூா் செயலாளா் ஏ.செல்வராஜ், தேவஸ்தானம் ஊராட்சி மன்றத் தலைவா் அன்பு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சியினா் அந்தந்தப் பகுதிகளில் பெரியாா் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை

'லக்கி பாஸ்கர்' வெளியீட்டுத் தேதி!

ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

SCROLL FOR NEXT