மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி அண்ணா நகா் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பக்தா்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். ஊா்வலம் நிறைவடைந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டுரங்கன், ஊா் நாட்டாண்மை சங்கா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் ஜி.ராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி ஜி.தெய்வநாயகம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காயத்ரி துளசிராமன், காா்த்திக் ஜவஹா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா்தண்டபாணி ஆகியோா் உடனிருந்தனா்.