அரசுப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடப் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியம், வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 15-ஆவது மாநில நிதிக்குழு மூலம் ரூ.5.93 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அதனை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் உணவு சமைக்கும் சமையலறை கட்டடம் பராமரிக்கும் பணியையும் பாா்வையிட்டாா்.
அப்போது, மாதனூா் ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆா். அசோகன், ஏ.வி. வினோத்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் டி. ரவிக்குமாா், ஆ. காா்த்திக் ஜவஹா், ஜோதிவேலு ஆகியோா் உடனிருந்தனா்.